பீர் குடிக்கும் போட்டி! சிக்கிய கணேசமூர்த்தியை விடுதலை செய்த போலீசார்! காரணம் என்ன?!
Pudukkottai Pongal 2024 Beer Drinking Competition
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாளான காணும் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு கபடி, பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சாக்கு ஓட்டம், மியூசிக்கல் சேர், கிரிக்கெட், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும்.
ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வாண்டான் விடுதி பகுதியில், இளைஞர்கள் சிலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பீர் குடிக்கும் போட்டி நடத்தப்படுவதாக பேனர் வைத்துள்ளனர்.
அதில், 10 பீர் குடித்தால் முதல் பரிசு ரூ.5,024, ஒன்பதரை பீர் குடித்தால் இரண்டாம் பரிசு ரூ.4,024, ஒன்பது பீர் குடித்தால் மூன்றாம் பரிசு ரூ.3,024 மற்றும் எட்டு பீர் குடித்தால் நான்காம் பரிசு ரூ.2,024 என்றுக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூட்டி விதிமுறைகளாக வாந்தி எடுத்தால் அல்லது துப்பினால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். குடித்த பீருக்கான பணத்தையும் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆளான நிலையில், பீர் குடிக்கும் போட்டி நடத்தப் போவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்த வாண்டான் விடுதியை சேர்ந்த கணேசமூர்த்தியை இன்று போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கணேசமூர்த்தியை கடுமையாக எச்சரித்த போலீசார், அவரை சொந்த ஜாமனில் விடுவித்தனர். ஏற்கனவே அவர் மீது பதிவு செய்த வழக்குகள் ஜாமினில் வெளியே விடும் பிரிவுகள் என்பதால், போலீசார் கணேசமூர்த்திக்கு எச்சரிக்கை மற்றும் கொடுத்து விடுதலை செய்துள்ளனர்.
English Summary
Pudukkottai Pongal 2024 Beer Drinking Competition