ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன் படத்தின் முதல் பாடல் ஜனவரி 31-ல்; படக்குழு அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.  இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இப்படம் எதிர்வரும் மார்ச் 07 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'ராசா ராசா' ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகிறது என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் - திவ்யா பாரதி நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் பெரிய அளவில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. தற்போது இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பேசப்பட்டது.

அத்துடன், இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The first song of GV Prakash Kumars Kingston is out on January 31


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->