குழந்தைகளை இரவு 11 மணிக்கு மேல் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது- ஐகோர்ட் உத்தரவு! - Seithipunal
Seithipunal


தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அம்மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.

 கடந்த மாதம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இப்படம் வெளியானபோது புஷ்பா 2 படத்தை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் அந்த தியேட்டருக்கு வந்திருந்தார்.

அந்த சமயத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் அவரது மகன் ஸ்ரீதேஜ் அப்போது படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சமபவம் தொடர்பாக கைதான நடிகர் அல்லு அர்ஜுன் ஜாமினில் வெளியே உள்ளார்.இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், தெலங்கானாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களை காலை 11 மணிக்கு முன்பாகவோ இரவு 11 மணிக்கு பிறகோ திரையரங்கிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று அம்மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மூலம் மனதளவில் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நீதிபதி விஜய்சென் ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Children should not be allowed to enter theatres after 11 pm HC


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->