விடாமுயற்சி படத்தின் 'பத்திகிச்சு' பாடலின், ரேசிங் வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது..! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித் குமார் - இயக்குனர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "விடாமுயற்சி." இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

'விடாமுயற்சி' படம் வருகிற பிப்ரவரி 06 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெறுள்ள ஆக்ஷன் காட்சிகள், படத்தின் ஒளிப்பதிவு, டிரெய்லரின் தரத்தை உயர்த்தியுள்ளது.

அத்துடன், படத்தின் முதல் பாடலான சவதீகா பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இந்தப் படத்தின் அடுத்த பாடல் (பத்திக்கிச்சு) பாடல் வெளியானது. இப்பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர்.

திரைப்படம் வெளியாக இன்னும் 09 நாட்கள் மட்டுமே உள்ளதால், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்துக்கொண்டிக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் பத்திகிச்சு பாடலை அஜித் குமார் ரேசிங் காணொளியுடன் ஒரு வீடியோவை இன்று மாலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

https://www.youtube.com/watch?v=ayJdhVmExTg

https://x.com/SonyMusicSouth/status/1884218146774737167?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1884218146774737167%7Ctwgr%5E6c5a886c2259929e9e9c8b7d6c0846fae90b4b46%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2Fvidaamuyarchi-padhikichu-song-racing-version-video-release-758074%2F-avs-params-%2Fshowbackbtn--2Fapp-lite2Fcinema


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The racing version of the Pathikichu song from the film Vidamayutsi has been released


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->