#புதுக்கோட்டை || மஞ்சு விரட்டில், ஆட்டம் போட்ட காளை., அலறி அடித்து ஓடிய மருத்துவ குழு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில், காளை ஒன்று பொதுமக்கள், பார்வையாளர்கள் நின்றிருந்த இடம் மற்றும் மருத்துவ முகாமுக்குள் புகுந்ததால், மருத்துவ குழுவினர் அலறியடித்து ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், சுந்தரசோலபுரம் பகுதியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில், 400-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது ஒரு காளை மட்டும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமுக்குள் புகுந்தது. இதனால், அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள், நாற்காலிகள், மேஜைகள் உடைந்து நொறுங்கின.

மேலும்,  மருத்துவ முகமே சூறையாடப்பட்டது போல் காட்சியளித்தது. பொதுமக்களும், மருத்துவ குழுவும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

குறிப்பாக மருத்துவ முகாமில் பணியாற்றிய அதிகாரிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் சம்பவத்தால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudukottai sunthara sozhapuram manjuvirattu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->