காலாண்டு விடுமுறை எதிரொலி!...பழனியில் குடும்பத்துடன் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
Quarterly holiday echoes palani with family flocks of devotees
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக இங்கு தைப்பூசம், வைகாசி விசாகம், சூரசம்ஹாரம் போன்ற முக்கிய திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சுவாமி தரிசனம் செய்வர். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பக்தர்கள் வருவதால் வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 10 நாட்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் குடும்பத்துடன் பழனிக்கு படையெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக பேருந்து நிலையம், கிரிவீதி மற்றும் அடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் படிப்பாதை, யானைப்பாதை, ரயில், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும், மலைக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டதால், பொது தரிசனம், சிறப்பு தரிசனங்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
English Summary
Quarterly holiday echoes palani with family flocks of devotees