சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளாகியும்., மின் வசதியே இல்லாமல்.. வாழும் கிராமம்.! அவதியில் கிராம மக்கள்.!
Ramanadhapuram Village people do Not Have electricity connection
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே சண்முக பிரபு என்ற கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவருமே விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்பவர்களுக்கு 1976-இல் இலவச மனை பட்டாவை அரசு கொடுத்துள்ளது. இருப்பினும், இந்த கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் மின்சார இணைப்பு உள்ளிட்டவை கொடுக்கப்படவில்லை. இதனால், இப்பகுதியில் இருக்கும் மாணவ, மாணவிகள் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பகுதி மக்கள் இங்கே சாலை வசதி, மின்சார வசதி எதுவும் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றோம். சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் ஆகியும், இந்த கிராமத்திற்கு விடிவு காலம் பிறக்கவில்லை. எங்களது வாழ்வாதாரம் இதனால் மிகவும் பாதிக்கப்படுகிறது. மற்ற மக்கள் போல் எங்களால் வாழ முடியவில்லை.
இரவு நேரங்களில் எங்கள் மக்கள் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு தான்., வேலைகளை கவனிக்கின்றனர்."என்று வேதனையுடன் கூறுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு நவீன வசதிகள் செயல்பாட்டில் இருந்தும் கூட ஒரு சாரார் எந்த விதமான அடிப்படை வசதியும், இல்லாமல் திண்டாடும் நிலை இருப்பது வேதனையை கொடுக்கிறது.
English Summary
Ramanadhapuram Village people do Not Have electricity connection