மோடியை கங்கை நதி தத்தெடுக்கவில்லை..கூவம் நதி தான் தத்தெடுத்துள்ளது - இவிகேஎஸ் இளங்கோவன்! - Seithipunal
Seithipunal


மோடியை கங்கை நதி தத்தெடுக்கவில்லை. கூவம் நதி தான் தத்தெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகி இவிகேஎஸ் இளங்கோவன் கூறிவுள்ளார் .

சமீபத்தில் மோடி கங்கை நதியில் சிறப்பு பூஜைக்கு பிறகு, கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்கு பின் கங்கை குறித்து மிக நெருக்கமாக உணர்கிறேன். கங்கை என்னை வலுப்படுத்தி தேற்றியது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், சென்னை சத்தியமூர்த்திபவனில்  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்தது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகி இபிகேஎஸ் இளங்கோவன், மோடியை கங்கை நதி தத்தெடுக்கவில்லை கூவம் நதிதான் தத்தெடுத்துள்ளது  உள்ளது. ஏனென்றால் அவரது பேச்சும் செயலும் அப்படித்தான் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்துபேசிய இபிகேஎஸ் இளங்கோவன், கள்ளச்சாராய வியாபாரம் அனைத்து ஆட்சிகளிலும் நடந்து வருகிறது. கள்ளச்சாராயம் விவகாரம் நடந்த உடனே மாவட்டத்தில் பணியாற்றி அதிகாரிகள் பணியிடைமாற்றம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு படையை அமைத்து கள்ளசாராயத்தை தமிழக அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

River Ganges did not adopt Modi Koovam river did EVKS Elangovan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->