மிக மோசமான நிலையில் தமிழகம்! மிக மிக மோசமான நிலையில் உத்தரப் பிரதேசம்! அதிர்ச்சி புள்ளி விவரம்! - Seithipunal
Seithipunal


சாலை விபத்துகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.78 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன, அவற்றில் 60% 18-34 வயதுக்குட்பட்டோரே என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சாலை விபத்துகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் 

முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் : 23,652 உயிரிழப்புகள்,
இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு : 18,347 உயிரிழப்புகள்,
மூன்றாம் இடத்தில் மகாராஷ்டிரம் : 15,366 உயிரிழப்புகள்.

சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிக எண்ணிக்கையில் நடைபெறும் மாநகரங்களின் பட்டியலில்

முதலிடத்தில் டெல்லி : 1,457 உயிரிழப்புகள், 
இரண்டாம் இடத்தில்பெங்களூரு : 915 உயிரிழப்புகள்,
மூன்றாம் இடத்தில் ஜெய்ப்பூர் : 850 உயிரிழப்புகள்.

விபத்துக்கள் குறித்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி மேலும் தெரிவிக்கையில், "சாலை விபத்துகள் அதிகரித்திருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஹெல்மெட் அணியாததும், சிவப்பு விளக்கைக் கடக்கிறதும் முக்கிய காரணங்கள்.

 லாரிகளை இடத்திற்கு மாறாக நிறுத்துவதும் விபத்துகளை அதிகரிக்கின்றது. பேருந்துகள் சர்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட வேண்டும்; அவற்றில் அவசரநேர சுத்தியல் வசதியும் வேண்டும்” எனத் தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Road Accident Report India 2024 Tamilnadu UP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->