நேர்மையான ஆட்சிக்கு கிடைத்த ''வெற்றி''... ஆர்.எஸ்.பாரதி நெகிழ்ச்சி பேச்சு.! - Seithipunal
Seithipunal


தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

மக்களவைத் தேர்தல் முடிந்து நாங்கள் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்ற சில நாட்களிலேயே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து தி.மு.க அரசுக்கு இடைத்தேர்தல் நேரத்தில் எந்த கட்சிக்கும் வராத சவால்கள் வந்தது. 

விக்கிரவாண்டி தொகுதிக்கு மிக அருகாமையில் இருக்கின்ற கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்பட்டது. 

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் எதிர்பார்க்காத விதமாக ஒரு கொலை நடைபெற்றது. அதற்கு அரசியல் சாயம் பூசி அதையும் மிகப் பெரிய பிரச்சனையாக மாற்ற பலர் முயற்சி செய்தனர். 

இந்த இரண்டு சவால்களுக்கு மத்தியில் முதலமைச்சர் 3 ஆண்டு கால நேர்மையான ஆட்சி நடத்தியதை மக்கள் ஏற்றுக்கொண்டு மக்களாகிய நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என நிரூபித்துள்ளனர். 

இந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மகத்தான வெற்றியை தேடிக்கொடுத்த விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் திமுக கடமைப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வாக்குகளை சேகரித்தார். 

அவரது அரசியல் பயணம் எங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்துள்ளது. இதன் மூலம் இன்னொரு வெற்றியும் தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது. தி.மு.கவின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RS Bharathi speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->