ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை..!!
Sakkarapani said coconut oil instead of palm oil sale in ration shop
தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கோவையில் உள்ள நியாய விலை கடைகளை ஆய்வு செய்தார். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் சக்கரபாணி "தற்பொழுது தேங்காய் விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை குறைவாக உள்ளது.
அதன் அடிப்படையில் நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார்.
English Summary
Sakkarapani said coconut oil instead of palm oil sale in ration shop