சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு நாள்.!
salem gohulralraj murder case judgment date
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில், மார்ச் மாதம் 5-ஆம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்.
முதலில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சங்ககிரி பகுதியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. மேலும், இந்த வழக்கு தற்போது மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் சாட்சிகள் அனைத்தும் முழுமையாக விசாரணை முடிந்து உள்ளதால், இந்த வழக்கின் தீர்ப்பை வருகின்ற மார்ச் மாதம் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சம்பத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
எனவே வருகின்ற மார்ச் மாதம் 5-ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
salem gohulralraj murder case judgment date