#சேலம் || சாதிமாறி காதல்., காவல் நிலையத்தில் தஞ்சம் - போலீஸ் விசாரணை.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் (வயது 30). இவருக்கும் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பட்டதாரி பெண் ஐஸ்வர்யா (வயது 23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளாடைவில் அது காதலாக மாறியது.

வெவ்வெறு சமூகத்தை சேர்ந்த இருவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இது பற்றி ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து, நேற்று வீட்டை விட்டு வெளியேறிய தேவேந்திரன், ஐஸ்வர்யா இருவரும் கிச்சிப்பாளையம் பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் பாதுகாப்பு கேட்டு சேலம் நகரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem kichipalaiyam love issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->