சீமானிடம் விசாரணை நிறைவு; ''நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.'' சீமான் பேட்டி..! - Seithipunal
Seithipunal


நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனின் ஆஜரானார். 

தனது வழக்கறிஞர்களுடன் வளசரவாக்கம் வரும் வழியில், அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சீமானிடம் சுமார் 75 நிமிடம் விசாரணை நடந்துள்ளது. அதன்பின்,  காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சீமான் அங்கு காத்திருந்த செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டிக் கொடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது; ''என் வீட்டில் சம்மன் ஒட்டியதோடு காவல்துறையின் வேலை முடிந்துவிட்டது. சம்மன் ஒட்டும்போது தடுத்திருந்தால் பணி செய்யவிடாமல் தடுப்பதாக கைது செய்திருக்கலாம். ஒட்டப்பட்ட சம்மனை நாங்கள் பார்த்த பிறகு கிழித்தோம். அது எப்படி குற்றமாகும்?

எங்கள் வீட்டிற்கு காவலாளி என்று யாரும் கிடையாது. என் வீட்டில் கைது செய்யப்பட்டவர் காவலாளி அல்ல. அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். என் மீது உள்ள அன்பு காரணமாக, எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பாசத்தின் காரணமாக வந்தவர் அவர்.'' என்று தெரிவித்தார்.

அத்துடன், ''என் வீட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் இரும்பு கம்பியில் துணியை சுற்றி அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். அது தேவையற்றது. நானும், என் மனைவியும் மனஉறுதி கொண்டவர்கள். ஆனால் என்னை நேசிக்கும் தம்பி, தங்கைகள் வலியுடன் குரல் செய்திகளை அனுப்புகின்றனர். அது வலியை மட்டுமின்றி, வெறியையும் ஏற்படுத்துகிறது''. எனவும் கூறினார்.

''கடந்த ஆண்டு 03 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் இந்த முறையும் கேட்கப்பட்டது.

புதிய கேள்விகள் ஒன்றுமில்லை. என்னிடம் அதே பழைய கேள்விகள் தான் கேட்கப்பட்டன. காவல் நிலையத்திற்கு தாமதமாக வர போலீசாரே காரணம். முதல்வர் உரையாற்றிக் கொண்டிருந்ததால் என்னை விசாரணைக்கு அழைக்க தாமதித்தனர்.

பெரியார் கொள்கைகளுக்கு எதிராக பேசுவதால் என்னை கைது செய்ய தி.க.விடம் இருந்து அழுத்தம் சென்றுள்ளது. நான் கைது, மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். அது அவர்களுக்கு நன்றாக தெரியும்.
என்னை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள்.'' எனவும் சீமான் தெரிவித்தார்.

மேலும், ''பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? விரும்பி பாலியல் உறவு வைத்துக் கொண்டவர் நடிகை தான். நடிகையுடன் ஏற்பட்ட உறவு திருமணம் என்ற நிலைக்கு வரவில்லை. நடிகையுடன் 6 அல்லது 7 மாதங்கள் தான் பழக்கம் இருந்தது.

கஷ்டத்தில் இருந்த போது நடிகையால் எனக்கு எப்படி ரூ 60 லட்சம் தர முடியும்? நடிகை என்னை காதலித்திருந்தால் இப்படி முச்சந்திக்கு வந்திருக்க மாட்டார். நடிகை வைத்திருந்தது காதல் அல்ல, கண்றாவி.'' எனவும் விமர்சித்தார்.

மேலும் அவர் பேசுகையில்; ''விஜயகாந்த் போன்று எனக்கு சினிமா பின்புலம் இல்லை, ஆனால், மக்கள் என்னை அங்கீகரித்திருக்கிறார்கள். மாண்புமிகு ஸ்டாலின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்த சீமான், பேட்டி முடிந்தது காரில் வீடு திரும்பும் போது, வழியில் காத்திருந்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தபடி சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Investigation with Seeman complete


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->