அரங்கேறிய படுகொலை | தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்!
Salem Tamilnadu Karnataka state border closed
சேலம் மாவட்டம், கொளத்தூர் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா உள்ளிட்ட மீனவர்கள் 3 பேர் தமிழக- கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள மீன் பிடிப்பதற்காக கடந்த 14-ஆம் தேதி இரவு சென்றனர்.
அங்கு வந்த கர்நாடக வனத் துறையினர் மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் ராஜா என்ற மீனவர் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில் உயிரிழந்தார்.
இரு மாநில எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2018-ஆம் ஆண்டில் அதே அடிப்பாலாறு பகுதியில் தமிழக மீனவர் பழனி என்பவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். அப்போது தமிழக மக்கள் கர்நாடக சோதனை சாவடியை அடித்து நொறுக்கினர்.
![](https://img.seithipunal.com/media/crime 0223.png)
இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஒரு தமிழக வீரர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சேலம் மாவட்ட தமிழக எல்லை பாலாறு சோதனைச்சாவடியில் போக்குவரத்து முழுவதும் நிறுத்தப்பட்டு உள்ளதால், கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலை, மைசூரு செல்ல இயலாது.
English Summary
Salem Tamilnadu Karnataka state border closed