புதிய மாணவர் சேர்க்கை ஜூன் 13ஆம் தேதி முதல் தொடக்கம்.! பள்ளிக்கல்வித் துறை.!
School admission June thirteenth start
தமிழகத்தில் புதிய மாணவர் சேர்க்கை வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இதைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பும், ஜூன் 27ஆம் தேதி பதினோராம் வகுப்பு தொடங்க உள்ளன.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை வருகின்ற ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த வருடம் பள்ளி திறப்பு க்கு முன்பே அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
English Summary
School admission June thirteenth start