அரசு நிகழ்ச்சிக்கு சரக்கு வேனில் வந்த இறங்கிய பள்ளி மாணவிகள் - ஈரோட்டில் பரபரப்பு.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான ’வாழ்க்கை வழிகாட்டி’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது, ஒரு சரக்கு வேனில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிகள் சிலர் அழைத்து வரப்பட்டு, ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு இறக்கி விடப்பட்டனர். இந்த காட்சியை அவ்வழியாக சென்ற ஒருவர் புகைப்படமாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 

இதைப்பார்க்கும் பலரும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்கூட மாணவிகளை எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சரக்கு வேனில் ஏற்றி சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை மேற்கொண்டு, மாணவிகளை அழைத்து வந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், மாணவ - மாணவிகளை இது போன்ற அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வரும்போது, உரிய பாதுகாப்புடன் அழைத்து வருவதை, பள்ளி கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student come load van in erode collector office


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->