விருதுநகரில் சோகம் : விஷப் பூச்சி கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் சோகம் : விஷப் பூச்சி கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாமிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாரிசெல்வம்-முத்துமாரி. இந்த தம்பதிகளுக்கு காவிய லெட்சுமி என்ற மகள் உள்ளார். இவர் சாயர்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்த முத்துமாரியும், காவிய லெட்சுமியும் சேர்த்து வீட்டைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென காவிய லெட்சுமி சத்தம் போட்டுக் குத்தியுள்ளார். இதைக்கேட்டு பதறியடித்து ஓடிவந்த முத்துமாரி மகளை பார்த்துள்ளார்.

அப்போது விஷப்பூச்சி ஒன்று காவிய லெட்சுமியைக் கடித்துவிட்டுச் செல்வது தெரிந்தது. இதனால், காவிய லெட்சுமி மயங்கி கீழே விழுந்தார். உடனே முத்துமாரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகளை ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். வீட்டைச் சுத்தம் செய்யும்போது விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த சுற்றுவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died for poisonous insect in viruthunagar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->