தறிகெட்டு ஓடிய லாரி குப்புற கவிழ்ந்து விபத்து! தப்பி ஓடிய ஓட்டுனருக்கு போலீசார் வலைவீச்சு!
Selam truck loaded with coal overturned accident
சேலம், கருப்பூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 42) இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை ஏற்றிக்கொண்டு பெருந்துறையை நோக்கி லாரியை ஓட்டி வந்தார்.
இவருடன் கிளீனராக கோகுல் (வயது 22) என்பவர் உடன் இருந்தார். திண்டுக்கல்-தாடிக்கொம்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று அதிகாலை லாரி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சாலை முழுவதும் நிலக்கரி கொட்டியதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து ஓட்டுனர் ஜெயராஜ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பலத்த காயமடைந்த கோகுலை அப்பகுதியில் இருந்த மக்கள் அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிவகுத்து நின்ற வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
English Summary
Selam truck loaded with coal overturned accident