தூத்துக்குடியை உலுக்கிய சம்பவம்!...பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!...பள்ளி முதல்வர் அதிரடி கைது!
Shocking incident that thoothukudi sexual harassment of school girls school principal arrested
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங் பணியாற்றி வந்துள்ளார். இதற்கிடையே, தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இதில் பங்கேற்பதற்காக, இவர் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, தூத்துக்குடியில் பள்ளி மாணவர்களுடன் விடுதி எடுத்து தங்கிய பொன்சிங், மாணவிகள் சிலரிடம் மது அருந்த வற்புறுத்தியும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவர்கள் தங்களது உறவினர்களுடன் பள்ளியில் திரண்டு முற்றுகையிட்டனர்.
இது குறித்து குழந்தை நல அலுவலர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடனடத்தி விடரணி மேற்கொண்டதில், பள்ளி நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தது.
இந்த சூழலில், கோவையில் பதுங்கி இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் நேற்று இரவில் கைது செய்த நிலையில், அவரை திருச்செந்தூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளியின் முதல்வர் சுவீட்லி, செயலாளர் செய்யது அகமது ஆகியோரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Shocking incident that thoothukudi sexual harassment of school girls school principal arrested