#விழுப்புரம் || மாமனாரை கட்டையால் அடித்துக் கொன்ற மருமகன் கைது..! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வேளியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் 4வது பெண்ணான கவுசல்யா சென்னையில் வேலை செய்த போது திருவண்ணாமலை மாவட்டம் கஷ்டம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் தனுஷ்குமார், ஜென்விஷா என இரண்டு குழந்தைகள உள்ளனர்.

கேசவனுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் மனைவி கவுசல்யாவுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யா அவருடைய சொந்த ஊரான வேலியந்தல் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே பெங்களூருவில் வேலை செய்யும் கேசவன் அடிக்கடி வேலியந்தல் கிராமத்திற்கு சென்று மனைவி, குழந்தைகளை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டு வந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று வேலியந்தல் கிராமத்திற்கு வந்த கேசவன் மது குடித்துவிட்டு நள்ளிரவு மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு  கேசவன் சொந்த ஊர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அப்போது மாமனார் ஆறுமுகம் கேசவனை மறித்து, குழந்தைகளை விட்டுச்செல்லுமாறு தொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேசவன் அருகில் இருந்த கட்டையால் ஆறுமுகத்தை கடுமையாக தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கஞ்சனூர் போலீசார் கேசவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகன் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son in law arrested formurdered his father in law in viluppuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->