உதயநிதி ஸ்டாலினுடன் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட தமிழ் நடிகர்.!  - Seithipunal
Seithipunal


விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைக்க இன்று மதுரை அலங்காநல்லூர் வந்தடைந்தார்.

அப்போது, மதுரையில் இருக்கும் தனது பெரியப்பா மு.க அழகிரியை சந்தித்து ஆசி பெற்றார்.

இதன் பின் அலங்காநல்லூர் சென்ற உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை துவங்கி வைத்தார். 

இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த போட்டியில் பிரபல நடிகர் சூரியும் தற்போது கலந்து கொண்டுள்ளார். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

சூரியின் சொந்த ஊரில் இருந்து போட்டிகள் கலந்து கொள்ள உள்ள ஜல்லிக்கட்டு காளை அவரது பெயரிலேயே விடப்படுகிறது. இந்த காளைக்கு பரிசு பொருட்கள் அதிக விலை மதிப்பு கொண்டவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soori participate with Udhayanithi stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->