கத்திக் குத்து : தாய் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான்!...கத்தியால் குத்தியவரின் தாய் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இது தொடர்பாக  விக்னேஷின் தாயார் பிரேமா, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, மருத்துவமனையில் எனக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும், மருத்துவர் பாலாஜி எப்பொழுதும் அவ மரியாதையாக பேசுவார் என்று கூறியுள்ளார். மேலும், என் தாயின் நுரையீரல் பாதிப்பு குறித்து ஏன் சொல்லவில்லை என்பதே என் மகனின் ஆதங்கம் என்றும், அவர் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை என்று கூறிய அவர், தாய்ப் பாசத்தில் செய்து விட்டான் என்று தெரிவித்தார்.

மேலும் என் மகன் இருதய நோயாளி என்று கூறிய அவர், அவனும்  அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவன் என்று கூறினார். மருத்துவரை அவன் கத்தியால் குத்தியது எனக்கு தெரியாது. அது தவறுதான். என் மேல் இருக்கும் பாசத்தால் இந்த முடிவை எடுத்திருக்கிறான் என்று கூறிய அவர், அவனுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றும், அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stabbing the mother has taken this decision out of affection the mother of the stabbing person has a sensational interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->