அமித்ஷாவை கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் - தமிழக காங்கிரஸ் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டிக்கும் வகையில்  தமிழ்நாடு வரும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எதிராக  கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

காந்தியடிகளின் 78வது நினைவு நாளை ஒட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.அந்தவகையில் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறும்போது:மத்திய மந்திரி அமித்ஷா தமிழகம் வருவதாக கேள்விப்பட்டோம் என்றும்  காங்கிரஸ் கமிட்டி சார்பாக அமித்ஷாவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார் . மேலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் தந்தை தேச பிதா ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு உற்ற தோழனாக, உறுதுணையாக இருந்த அம்பேத்கரை, தனது கருத்துகளால் அம்பேத்கர்..அம்பேத்கர்.. என்று இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் இரும்பு கரம் போன்று பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக அரசுக்கு தொடர்ந்து ஒரு கோரிக்கை வைக்கிறோம் என கூறினார் ..மேலும் இரவு நேரங்களில் கூட பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு பாதுகாப்பான முறையில் தனது வீடுகளுக்கு செல்வதே சுதந்திரம் என்று பேசிய அவர் ,பெண்களை காப்பாற்றுவது குறித்து கடமையும் பொறுப்பும் காவல்துறைக்கு உள்ளது என கூறினார்.

இந்தியாவை பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் அமைதியாக வாழ்கிற இடம் தமிழ்நாடு என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார் என்பதை சுட்டிக்காட்டிய  செல்வப்பெருந்தகை சென்னையில் பெண்களுக்கு நடந்த இந்த சம்பவம் அநாகரீகமான செயல், காங்கிரஸ் கமிட்டி இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பிள்ளைகள் அனைவரும் எங்களுடைய பிள்ளைகள், அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதுதான் எங்களுடைய நோக்கம் என்றும்  சென்னையில் நடைபெற்ற சம்பவம் பொருத்தவரை அருவெறுப்பான சம்பவம், தலைகுனியக்கூடிய சம்பவம் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்,

மேலும் தவறான சம்பவத்தில் ஈடுபடும் ஒருவரால் தமிழ்நாடு என்ற ஒட்டு மொத்த பேருக்கும் அவமானமாக உள்ளது என கூறிய செல்வப்பெருந்தகை இனி வரும் காலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் விதமாக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும்  பின்னர் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது" என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Congress announces black flag protest against Amit Shah


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->