விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் முதலிடம் - எந்த மாநிலம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள தெப்பக்குளம் அருகே பாதாள சாக்கடையை தூய்மைப் பணியாளர் சுத்தம் செய்வதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் மா.வெங்கடேசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். 

அதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:-

‘’துப்புரவு பணியாளர் இரவு நேரங்களில் சாலையோரம் படுத்து தூங்குவதைத் தவிர்ப்பதற்கும், உடைகள் மாற்றுவதற்கும் திருமண மண்டபங்களை ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்வது ஆபத்தானது. அதனை யாரும் செய்யக் கூடாது. இந்தியாவிலேயே விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது’’ என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu first place of poison gas deaths


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->