டாஸ்மாக் பணியாளர்களுக்கு குட் நியூஸ் - தீபாவளி போனஸ் எவ்வளவு தெரியுமா?
tamilnadu government announce bonous to tasmac employees
இந்த மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மதுபானக்கடை பணியாளர்களுக்கு 2023-2024-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 25,824 பயன்பெறுகின்றனர். அதிகபட்சமாக தீபாவளி போனஸ் ரூ.16,800 வரை கிடைக்கும்.
இந்த போனஸ் பணியாளர்களின் வங்கி கணக்குகளிலேயே நேரடியாக பணம் வரவு வைக்கப்பட இருப்பதால், அதற்கான பட்டியலை மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், டெப்போ மேலாளர்கள் தனித்தனியாக மதுபான நிர்வாகத்துக்கு நேற்று மாலைக்குள் அனுப்பிவைக்க கோரப்பட்டிருந்தார்கள்.
அதன்படி, அனைத்து அதிகாரிகளும் நேற்று மாலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியதை தொடர்ந்து, மதுபான பணியாளர்களுக்கு இன்று போனஸ் வழங்கப்பட உள்ளது. அவர்களின் வங்கி கணக்குகளில் போனஸ் தொகை வரவு வைக்கப்படவுள்ளது.
English Summary
tamilnadu government announce bonous to tasmac employees