நிபா வைரஸ் எதிரொலி - அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
tamilnadu government Precautionary measure for nipha virus
நிபா வைரஸ் எதிரொலி - அரசு மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
நமது அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முப்பதாம் தேதி மர்ம காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக அரசு நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
* நோயுற்ற, வைரஸ் அறிகுறி உள்ளவர்களை கையாண்ட பின் 20 நொடிகள் சோப்பினால் கை கழுவிய பின் மற்ற பணிகளை சுகாதார ஊழியர்கள் செய்ய வேண்டும்
* மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதாரத் துறை ஊழியர்கள் பிபிஇ கிட், முகக்கவசம், கையுறை அணிவது அவசியம்
* மருத்துவ உபகரணங்களை தொடர்ச்சியாக கிருமி நீக்கம் செய்து பயன்படுத்துவது அவசியம்
* நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் மற்றும் ஊசி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவது அவசியம்
English Summary
tamilnadu government Precautionary measure for nipha virus