ராமேஸ்வரம் : ராம்நாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.!
TamilNadu governor pray rameshwaram
ராமேஷ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
ராமேஷ்வரம் ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த தமிழக கவர்னருக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் வைக்கப்பட்ட கலசத்தில் இருந்து புனித நீரானது கவர்னர் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் ஸ்படிக லிங்க தரிசன பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்ததுடன் கருவறையில் உள்ள சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார்.
அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டுக்கு வருகை தந்து அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசினார்.தொடர்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
English Summary
TamilNadu governor pray rameshwaram