தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.! - Seithipunal
Seithipunal


தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும் தமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வெப்ப அலை வீச கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌகரிகம் ஏற்படலாம். 

சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளில் 5 சென்டிமீட்டர் மழையும்  மதுரை மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu weather report 30042024


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->