சென்னைக்கு ஆரஞ்சு அலெர்ட்! நாளை, நாளை மறுநாள் மக்களே உஷார்! தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
Tamilnadu Weather Report Chennai Very Heavy Rain Alert
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று முன்பு உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த இரண்டு நாட்களில் வலுப்பெற்று, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளை நோக்கி வரும் என்றும் இந்திய மாநில ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தை நோக்கி வரக்கூடிய இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,
ஆரஞ்சு அலர்ட் :
17.12.2024 : செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை & புதுச்சேரி.
18.12.2024 : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் & புதுச்சேரி.
மஞ்சள் அலெர்ட்
17.12.2024 : சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால்.
18.12.2024 : ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், அரியலூர், மயிலாடுதுறை & காரைக்கால்.
19.12.2024 : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் & காஞ்சிபுரம்.
English Summary
Tamilnadu Weather Report Chennai Very Heavy Rain Alert