அதிக விலைக்கு விற்பனை செய்தால் டிஸ்மிஸ் - டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


அதிக விலைக்கு விற்பனை செய்தால் டிஸ்மிஸ் - டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை.!

தமிழகத்தில் உள்ள மதுபானக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், இதற்கு மதுபானக்கடை நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. 

இந்த நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மதுபான மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் பெரும்பாலான கடைகளில் 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், 
'ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். 

இந்த அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் போன்று இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது மதுப்பிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது" என்று அதில் தெரிவிக்கபட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac shop employees dismiss if sale high price


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->