5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியரை நையபுடைத்த உறவினர்கள்..! - Seithipunal
Seithipunal


5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த 20ம் தேதி அந்த பள்ளி திறக்கப்பட்டது.அந்த பள்ளியில் தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய போது மீண்டும் பள்ளிக்கு செல்லமாட்டேன் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்ச்சியடைந்த அவர்கள் சிறுமியிடம் காரணம் கேட்டுள்ளனர்.

அப்போது அந்த பள்ளியில் பணியாற்றும் அகஸ்டின் தங்கையா  என்ற ஆசிரியர் அவருக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும் மேலும்,தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் பாலியல்தொல்லை அளித்ததும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைன்ந்த அவர்கள் ஆசிரியரிடம் சென்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் மழுப்பலாக பதிலளிக்கவே  அவரை சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகலறிந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teacher arrasted who sexually abused 5th Student


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->