பள்ளி வளாகத்தில் சண்டையிட்ட ஆசிரியர்கள்.. பணியிடை நீக்கம் செய்து உத்தரவு..!
Teachers who fought on the school campus were fired
பள்ளி வளாகத்தில் இரண்டு ஆசிரியர்கள் சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் காலாடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது அந்த பகுதியில் உள்ள 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக அண்ணாமலை என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று கொடியேற்று விழாவிற்கு காலதாமதமாக வந்த ஐந்து ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது.
அப்போது ஆசிரியர் செழியன் என்பவருக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறி இருவரும் சட்டையை பிடித்து கட்டிப்புரண்டு சண்டையிட்டனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதனை அடுத்த பள்ளியில் ஒழுங்கீனமாக மோதலில் ஈடுபட்டதற்காக தலைமையாசிரியர் அண்ணாமலை ஆசிரியர் செழியன் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிய மூவரையும் முதன்மை கல்வி அலுவலர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
English Summary
Teachers who fought on the school campus were fired