பதிவி ஏற்ற முதல் நாளிலேயே.. தென்காசி ஆட்சியர் அதிரடி.!!
Tenkasi collector send circular to govt staffs
தமிழகம் முழுவதும் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் அவர்களில் 6 பேர் மாவட்ட ஆட்சியர்கள் அடங்குவர். தமிழக அரசால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் இன்று பதவி ஏற்று கொண்டனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட ஆட்சியராக ஏகே கமல் கிஷோர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பதவியேற்ற முதல் நாளிலேயே அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் "நாளை முற்பகல் 10 மணி முதல் இணைப்பில் காணும் துறைகளில் தலைவர்கள் தலைமை அலுவலர்கள் மட்டும் துறை சார்ந்த சிறு குறிப்புடன் தற்போது துறைகளில் நடைபெற்று வரும் பணி இலக்கு, தற்போதைய சாதனை குறித்து புள்ளி விவரங்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைவரை சந்திக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தகுதி இருந்தும் நீண்ட காலமாக தீர்வு காணாமல் நிலைமையில் உள்ள இனங்கள் குறித்தும், நேரடி கவனம் செலுத்தி உடனடியாக தீர்வு காண வேண்டிய இனங்கள் குறித்தும், கூர்நோக்கு இனங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்கும்போது எவ்வித பரிசுப் பொருட்களோ பூங்கொத்துகளோ, சால்வையோ இதர ஏதேனும் கவரும் பொருட்களையோ பரிசளிக்க கண்டிப்பாக அனுமதி இல்லை.
மேலும் வட்டாட்சியர்களோ வட்டார வளர்ச்சி அலுவலர்களும் மாநகராட்சி ஆணையர்களோ பேரூராட்சி செயல் அலுவலர்களோ வருகை தர வேண்டாம். அவர்களை அவர்களது களப்பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது" அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Tenkasi collector send circular to govt staffs