மாளிகைக்கடையில் ஓட்டைபோட்டு திருட்டு.. வடிவேல் காமெடியான சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக சேமிப்பு கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. இந்த கிட்டங்கியில் மளிகை பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கிட்டங்கியில் பாதுகாவலர்களாக வேல்முருகன் என்ற நபர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வேல்முருகன் மற்றும் இரண்டு பேர் இரவு நேரத்தில் ரூ.57 ஆயிரம் மதிப்புள்ள மிளகு மற்றும் மல்லி பொடிகளை திருடி சென்றுள்ளார். 

இதனைகவனித்த அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர், இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் வேல்முருகன் மளிகை பொருட்களை திருடியது உறுதியானதை அடுத்து, வேல்முருகன், பலவேசமுத்து மற்றும் சக்திகுமார் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tenkasi police arrest thief


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->