சிறை பிடிப்பை கண்டித்து இன்று வேலை நிறுத்த போராட்டம்!!! ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் சிறை...!
Strike today to protest imprisonment!!! 3 Rameswaram fishermen jailed
நேற்று முன்தினம் அதிகாலையில் ராமேசுவரம் மாவட்டம் துறைமுகத்திலிருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2000 ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது தங்கச்சி மடத்தை சேர்ந்த கென்னடி என்பவருக்கு சொந்தமான படகில் சென்றிருந்த சங்கர், அர்ஜூனன், முருகேசன் ஆகிய மூவரையும் அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்தவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் 3 மீனவர்களையும் ஒப்படைத்தனர். பின்பு அவர்களை ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ராமேசுவரம் மீனவர்கள்:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 3 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் மூன்று பேரையும், அவர்களின் விசைப்படகையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக ராமேசுவரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்டம்:
மேலும் இந்த வேலை நிறுத்தத்தினால் ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, நேரடியாகவும், மறைமுகமாகவும் 5000 ற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அவ்வப்போது இந்த மாதிரி வழக்குகள் இலங்கை கடற்படையினரால் நாடாப்பதால் அதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைக்க கோரி மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
English Summary
Strike today to protest imprisonment!!! 3 Rameswaram fishermen jailed