ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபல நடிகர் - யார் தெரியுமா?
actor sj surya act in jailer 2 movie
பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் 'ஜெயிலர்'. இதில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பிரபல நடிகரான எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
actor sj surya act in jailer 2 movie