தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: கோவை, ஈரோடு மாவட்டங்களில் பலத்த சோதனை!  - Seithipunal
Seithipunal


தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக  கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள  சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புகள் தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்
 
ஜம்மு-காஷ்மீரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது.இதையடுத்து  நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை  மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், பஸ் நிலையம், கடைவீதிகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இதுதவிர கோவை  மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், லாட்ஜ்கள், ஓட்டல்களிலும் போலீசார் அடிக்கடி சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.இதேபோல் கோவைரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், தண்டவா ளங்களில் சோதனை மேற்கொண்டனர்.

உளவுத் துறை உஷார் படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி ஈரோடு மாவட் டத்தில் நேற்று இரவு முதல் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இரவு முதல் காலை வரை விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள சோதனைச் சாவடி, லட்சுமி நகர் சோதனை சாவடி, தாளவாடி அடுத்த காரை பள்ளம் சோதனை சாவடி என மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Terror attack Heavy raids conducted in Coimbatore Erode districts


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->