தென்னந்தோப்பில் சாராய வாடை.. உள்ளே சென்ற காவல்துறைக்கு அதிர்ச்சி.. திமுக பிரமுகர்கள் கைது.!
Thanjavur Peravurani DMK Supporters Fake Liquor at Garden 23 June 2021
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி மேலமனக்காடு கிராமத்தை சார்ந்தவர் ஐயப்பன் (வயது 53). இவர் திமுக வட்ட பிரதிநி ஆவார். செல்வராஜ் (வயது 48) திமுக பிரமுகர் ஆவார். மேலும், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் செல்வராஜ் இருக்கிறார்.
இந்நிலையில், இவர்களின் நண்பரான கணேசன் (வயது 57) என்பவருடன் இருவரும் சேர்ந்து, ஐயப்பனுக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், 50 லிட்டர் அளவுள்ள பேரலில் சாராயம் இருந்தது உறுதியானது. இதனையடுத்து, சாராயத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதில் விஷத்தன்மை கொண்ட வாயு வெளியாவதையும் உறுதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் ஐயப்பன், செல்வராஜ், கணேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் தெரிவிக்கையில், அவர்கள் காய்ச்சிய கள்ளச்சாராயம் விஷத்தன்மையாக மாறியுள்ளது. நல்ல வேலையாக அதனை கண்டறிந்துவிட்டோம். இவர்கள் கள்ளசாராயத்தை கள்ளத்தனமாக விற்பனை செய்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும் என்று தெரிவித்தனர்.
English Summary
Thanjavur Peravurani DMK Supporters Fake Liquor at Garden 23 June 2021