டாஸ்மாக் சரக்கு | பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! சம்பளம் பத்தல வாங்குறோம் - வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஒரு மது பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்த விவகாரம் மது பிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள நம்பர் 1881 டாஸ்மாக் கடையில் தான் மேற்சொன்ன சம்பவம் நடந்திருக்கிறது.

 இந்த டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் விற்பனையாளர் ஒருவர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக கேட்ட விவகாரத்தை மது பிரியர்கள் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர். 

அந்த வீடியோவில் விற்பனையாளர் கூறியது, என்னுடைய மாத சம்பளம் அடிப்படை தேவைக்கு கூட போதுமானதாக இல்லை. 

 இந்த கடையில் வேலை செய்யும் டாஸ்மாக் சூப்பர் வைசரின் மாத சம்பளம் 13,500. ஆனால் விற்பனையாளராக இருக்கும் என்னுடைய சம்பளம் வெறும் 12,500 தான்  இவ்வாறு அந்த வீடியோவில் அவர் கூளியுள்ளார்.

இதற்கு அங்கிருந்த மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்றால் உங்களின் ஒரு நாள் சம்பளம் தோராயமாக இருபத்தைந்து ஆயிரம்  என்று  அடுக்கடுக்காக கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur TASMCA shop video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->