சென்னையின் மருமகனுக்கும் பெங்களூர் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!
BJP MP Tejasvi Surya marriage chennai
பாஜகவின் வளர்ந்துவரும் இளம்தலைவரும், பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி-யுமான தேஜஸ்வி சூர்யா, சென்னையைச் சேர்ந்த பாடகியும், பரதநாட்டிய கலைஞருமான சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாதை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், திருமணம் வரும் மார்ச் 4-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.
ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக தேஜஸ்வி சூர்யா மற்றும் பாடகி தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் சென்னையில் பரதநாட்டியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றதுடன், சென்னை சமஸ்கிருத கல்லூரியில் சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டமும், சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ இன்ஜினியரிங் துறையில் பி.டெக். பட்டமும் பெற்றுள்ளார்.
"பொன்னியின் செல்வன்" இரண்டாம் பாகத்தின் கன்னட மொழி பதிப்பில் ஒரு பாடல் ஒன்றையும் பாடியிருக்கிறார் பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்.
English Summary
BJP MP Tejasvi Surya marriage chennai