தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி! நாளையும் தொடரப்போகும் போராட்டம்!
The negotiations held by the unions failed The struggle will continue tomorrow
வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி உடன் நடத்திய போச்சு வார்த்தை தோல்வி!
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக இன்று காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களின் பிரதான கோரிக்கைகளான " பிபி எண் 2 நாள் 14-4-2022 அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படையை உயர்த்தி வழங்கிட வேண்டும்" என்பன கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர்.
காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டமானது மாலை வரை தொடர்ந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் 15 சங்க தொழிலாளர்களும் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதனிடையே தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தொழிலாளர் நல சங்க கூட்டுக்குழுவின் சார்பில் முக்கியமான கோரிக்கையான பிபி.2 ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் மின்வாரிய தலைவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனால் பேச்சு வார்த்தையானது தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக நாளையும் காத்திருப்பு போராட்டம் தொடரும் என மின்வாரிய தொழிலாளர் சங்க கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற தொமுச போன்ற ஒரு சில சங்கங்கள் மட்டுமே கலந்து கொள்ளவில்லை என்பதால் இதை காத்திருப்பு போராட்டம் இல்லை. வேலை நிறுத்த போராட்டம் என்றே கூறலாம். பெரும்பாலான ஊழியர்கள் வேலைக்கு திரும்பவில்லை.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய காற்றும் மழை பெய்து வரும் நிலையில் மின்தடை ஏற்பட அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகி உள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பழுது சரி பார்க்கும் பணிகள் தாமதமாகும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
இந்தியாவில் மின் தடையால் மருத்துவமனைகளில் ஏற்பட்ட பல இறப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. எனவே பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு ஆளுங்கட்சி பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
The negotiations held by the unions failed The struggle will continue tomorrow