மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி - தேனி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் படி, இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது.

இதற்காக பொதுமக்கள் கம்ப்யூட்டர் சேவை மையம் மற்றும் மின்வாரியத்திற்கு சென்று தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். இதனால், அங்கு மக்களின் கூட்டம் அலை மோதியது.

இந்த கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இருப்பினும், கூட்டம் குறையாததால், அரசு சார்பில் இணையதள வெப்சைட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த வெப்சைட் மூலமாகவும் மக்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஆனால், இன்னும் பல பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளதால் அவர்களுக்காக கால அவகாசமும் நீட்டப்பட்டது. 

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 2.10 கோடி நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதில், தேனி மாவட்டத்தில் உள்ள 48 லட்சம் நுகர்வோரும் 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

அந்த வகையில், தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தில் தேனி மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni district first place for adhar number add to electricity number


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->