தென் மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்.!! ஆகஸ்ட்-6 முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலி வரை வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தற்போது சென்னை-பெங்களூரு, சென்னை-கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் ரயில்சேவையை வழங்க திட்டமிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் பயணிகளின் வசதிக்காக சென்னை - மதுரை இடையேயான ரயில் சேவையை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திற்கும் கடிதம் எழுதி இருந்தார்.

சென்னை - நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 6ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண நேரம் குறையும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunalveli vande bharat train service to start from August 6


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->