உதவி இயக்குனருக்கு மூச்சுமுட்ட போதையேற்றி... தங்கை செய்த பகீர் செயல்.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே தெக்கலூரை சேர்ந்தவர் தான் சினிமா துணை இயக்குனரான தங்கதுரை என்ற 52 வயது நபர். இவருக்கு அம்பிகா என்ற தங்கை சேடப்பாளையத்தில் வசித்து வந்துள்ளார். அம்பிகாவின் கணவர் வேலுச்சாமி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். 

பூர்விக சொத்தை தங்களுக்கு கொடுக்குமாறு அம்பிகா தங்கதுரை இடம் அடிக்கடி கேட்டு வந்தார். இதனால், அவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் தங்கதுரை தங்கை அம்பிகா மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். 

அந்தப் புகாரில், "எனது பெற்றோர் இறந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் சேலத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தேன். இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. எனவே தனியே வசித்து வந்தேன். எனது தங்கை பூர்வீக சொத்துக்களை கேட்டு என்னை தொந்தரவு செய்து வந்தார்.

கடந்த ஜனவரி 25ல் சேடப்பாளையத்தில் வசிக்கும் ஒருவரின் தாராபுரம் தோட்டம் விற்பனைக்கு உள்ளதாக கூறி அம்பிகா என்னை அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே அவருடைய கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுல கண்ணன் உள்ளிட்டோர் என்னை அடித்து வாயில் துணியை வைத்து திணித்து சொத்துக்களை எழுதி தரச் சொல்லி துன்புறுத்தினார்.

அடி தாங்க முடியாமல் 21 பத்திர பேப்பர்களில் நான் கையெழுத்து போட்டு விட்டேன். நான் அணிந்திருந்த தங்க நகை மற்றும் பணம் என்னுடைய வங்கி ஏடிஎம், குடும்ப அட்டை, இதர அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டார்கள். எனக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து மயக்கம் அடைய செய்து விட்டனர்  

நான் மீண்டும் எழுந்த போதும் எனக்கு திரும்பத் திரும்ப மது போதை ஏற்றுக் கொண்டே இருந்தார்கள். பின் நான் மது போதையில் இருந்து தெளிந்த நிலையில் பெங்களூரு மன நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தேன். பின், அங்கிருந்து எனது வளர்ப்பு தாய் வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் என்னை மீட்டனர் என்று பல்லடம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruppur sister Attack And Theft Assets Of assistant director


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->