#கடலூர் || சிறுமியை கடத்திய சிறுவன் உட்பட இருவர் கைது.! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனையும், அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வாட்ஸப் வாட்ஸப் மூலம் பழகிய சிறுமி ஒருவரை, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் ஒருவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்த வாலிபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

திட்டக்குடி அடுத்துள்ள ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு, 17 வயது சிறுவன் ஒருவன் வாட்ஸ்அப் மூலம் அறிமுகமாகி உள்ளான்.

கடந்த 3 மாதமாக இவர்கள் பழகி வந்த நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி, காதல் வலையில் விழுத்திய அந்த சிறுவன்,  திருப்பூருக்கு சிறுமியை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

இந்த நிலையில், சிறுமி இந்த விவகாரம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சிறுவனுக்கு அடைக்கலம் கொடுத்த அதே கிராமத்தை சேர்ந்த சேவாக் (20 வயது) என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thittakudi 16 years old girl kidnap case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->