தைரியமான நேர்மையான விஏஓ.,ங்க அவரு! மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உருக்கமான பேட்டி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே மணல் கொள்ளை குறித்த தகவல் தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளை கும்பளலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே, கோவில்பந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், இன்று மதியம் அவரின் அலுவலகத்தில் வைத்தே மணல் கடத்தல் குமபலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

கடந்த 10 நாட்களுக்குமுன் தாமிரபரணி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக லூர்து பிரான்சிஸ் புகார் அளித்த நிலையில், கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து கொலை செய்துள்ளனர்

இந்த கொலை சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவிக்கையில், "புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அளித்துள்ள பேட்டியில், "விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுகிறது.

விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர். ஆதிச்சநல்லூரில் பணியாற்றியபோது அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து தைரியமாக விரைந்து மீட்டு தந்தவர். 

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும்" என்று ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi lurdhu francis murder case 2023


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->