திருப்பதி போகும் பக்தர்கள் கவனத்திற்கு! மிஸ் பண்ணீங்க, மிஸ் ஆகிடும்! இனி ஆதார் கட்டாயம்!  - Seithipunal
Seithipunal


திருப்பதியில் இன்று முதல் லட்டு வாங்க பக்தர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லட்டுக்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சில மாற்றத்தை செய்துள்ளது.

அதன்படி, சாமி தரிசனம் செய்யாமல், லட்டு மட்டுமே தேவை என்று வருபவர்கள், அவர்களுடைய ஆதார் அட்டையை கவுண்டர்களில் சமர்ப்பித்து இரண்டு லட்டுக்களை வாங்கி செல்லலாம் என்றும் தெரிவிக்கபோட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, தேவஸ்தானத்தில் பணியில் இருக்கும் சில ஊழியர்கள் தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத் தன்மையுடன் வழங்கவும், டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்தவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

குறிப்பாக  திருப்பதி லட்டு பிரசாதங்களை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இனி சாமி தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள், லட்டு கவுண்ட்டர்களில் 48 முதல் 62 வரை உள்ள கவுண்ட்டர்களில் ஆதார் பதிவு செய்து 2 லட்டுகளை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

வழக்கம் போல தரிசன டோக்கன்கள் மற்றும் டிக்கெட் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, கூடுதல் லட்டுகளையும் பெற்று கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupati Temple Aadhaar Card Tirupati Laddu 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->