பேக்கரியில் ஓசி கேட்டு அட்டகாசம்.. குழந்தை கொலை முயற்சி.. சில்வண்டு புள்ளிங்கோஸ் கோஷ்டி அட்டகாசம்.! - Seithipunal
Seithipunal


பேக்கரியில் புகுந்த புள்ளிங்கோஸ் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுக்க மறுத்து, பேக்கரியை அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியை அடுத்துள்ள சேவூர் பகுதியில் ஐயங்கார் பேக்கரி இயங்கி வருகிறது. இந்த பேக்கரிக்கு வந்த மதுபோதை ஆசாமி, சில பொருட்களை வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் புறப்பட்டுள்ளார். 

இதனைகவனித்த பேக்கரி உரிமையாளர் பணத்தை கேட்ட நிலையில், அவரின் சட்டையை பிடித்து இழுத்து மதுபோதை ஆசாமி அடித்து இருக்கிறான். பின்னர் தனது தரப்பில் பார்க்கவே பக்கா புள்ளிங்கோ போல உள்ள இளம் வயது சிறார்கள் 10 பேரை அழைத்து வந்து பேக்கரியை சூறையாடியுள்ளனர். 

மேலும், பேக்கரியில் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தையுடன் தேநீர் அருந்த வந்திருந்த தம்பதியின் மகனையும் கொலை செய்யும் முயற்சியோடு மதுபோதை கொடூரன் குழந்தையை பிடுங்க முயற்சி செய்துள்ளான். பேக்கரியில் இருந்த நபர் சுதாரித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார். இது தொடர்பாக ஆரணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே தமிழகத்தின் ஒரு பிரதான கட்சியின் மீது ஓசி சாப்பாடு தொடர்பான குற்றசாட்டு இருக்கும் நிலையில், தற்போது கொலைவெறி தாக்குதல் மற்றும் குழந்தை கொலை முயற்சி செய்துள்ள கும்பலும் திமுக கூட்டணியில் உள்ள ஒரு சார்பு கட்சி என்பதும் தெரியவருகிறது. மேலும் பிற விபரங்கள் விசாரணையில் உறுதியாகும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Arani Sevur Iyangar Bakkery Drunken Man gang Clash Free Food 15 April 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->