#BREAKING | மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்!
TN Budget 2023 2024 march 20
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் மாதம் நடக்க உள்ளதை, தற்போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போதே முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளரை சந்தித்து தெரிவித்தாவது, "2023-24 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது" என்று அறிவித்தார்.
முன்னதாக, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் வருகின்ற மார்ச் மாதம் 9ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Budget 2023 2024 march 20